பிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்

பிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்: நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் அக்கா மகனும், பிரபல கன்னட நடிகரும் ஆனா சிரஞ்ஜீவி சர்ஜா இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39.

Chiranjeevi-Sarja-in-passed-awayகன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா, இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1980அக்டோபர் 17 ம் தேதி பெங்களூருவில் பிறந்தார் சிரஞ்ஜீவி சர்ஜா. அவரது தாத்தா சக்தி பிரசாத் [Shakti Prasad] கன்னட நடிகர். பிரபல நடிகரான அர்ஜுன் சர்ஜா [Arjun Sarja] இவரது மாமா. இவரது தம்பி துருவ சர்ஜா [Dhruv Sarja] வும் நடிகர்தான். 2018 ல் நடிகை மேகனா ராஜை [Meghana Raj] மணந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு ‘வாயுபுத்ர’ [Vayuputra] என்ற திரைப்படம் மூலம் கன்னட திரை உலகில் அடி எடுத்து வைத்தார் சிரஞ்ஜீவி சர்ஜா. இந்த படம் தமிழ் படமான சண்டக்கோழி [Sandakozhi] படத்தின் ரீமேக் ஆகும்.

சண்டக்கோழி, காக்க காக்க, பீடச, பையா, பாண்டிய நாடு, மாயா, அதே கண்கள், பிச்சைக்காரன், குட்டி புலி, கிரி உட்பட பத்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களின் கன்னட ரீமேக் ல் நடித்துள்ளார் சிரஞ்ஜீவி சர்ஜா.

இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இன்று மத்தியானம் அவருக்கு மூச்ச்சு திணறல் ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். அவரை உடனடியாக பெங்களூரின் ஜயநகரில் உள்ள அப்போல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அனால் அவர் மாரடைப்பால் காலமானதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த திடீர் மரணத்தின் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்யாணமாகி இரண்டே வருடங்கள் ஆகி இருந்தது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது இன்னும் வேதனை அளிக்கின்ற செய்தி.

வயதில் தன் மனைவி மற்றும் குடும்பத்தினரை விட்டு மறைந்துள்ள நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா வின் ஆன்ம சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு இந்த சோகத்தை தாங்கும் சக்தி கிடைக்கட்டும். அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *