எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்

எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் [MGR Saroja Devi Tamil Movies List]: புரட்சி தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ [M. G. Ramachandran] மற்றும் கன்னடத்து பைங்கிலி ‘பி. சரோஜா தேவி ’ [B. Saroja Devi]- தமிழ் சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் 26 தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள்.

எம்.ஜி.ஆர் - சரோஜா தேவிபி. சரோஜா தேவி இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர். தனது திரை வாழ்க்கையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சரோஜி தேவி அவர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ராஜ்குமார், திலீப் குமார், ஷம்மி கபூர், என்.டி.ராமராவ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருந்தார், ஆனால் எம். எம்.ஜி.ஆருடனான அவரது முதல் படம் 1958 இல் வெளியான ‘நாடோடி மன்னன்’.

நாடோடி மன்னன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சரோஜா தேவி அவரகள் பின்னர் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். எம்.ஜி.ஆர்-சரோஜா தேவியின் ஜோடி பசுமையான பாடல்களுடன் மறக்க முடியாத பல தமிழ் திரைப்படங்களைத் நமக்கு தந்துள்ளது.

இவ்ரகள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்..

1. நாடோடி மன்னன் [1958]
வெளியீடு: 22 ஆகஸ்ட் 1958
இயக்கம்: எம். ஜி. ராமச்சந்திரன்
திரைக்கதை: சி. குப்புசாமி, கே. ஸ்ரீனிவாசன், பா. நீலகண்டன்
இசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு
இணை நடிகர்கள்: பி. எஸ். வீரப்பா, எம். என். நம்பியார், பி. பானுமதி

2. திருடாதே [1961]
வெளியீடு: 23 மார்ச் 1961
இயக்கம்: பா. நீலகண்டன்
திரைக்கதை: கண்ணதாசன்
இசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், கே. ஏ. தங்கவேலு, எம். என். ராஜம்

3. தாய் சொல்லை தட்டாதே [1961]
வெளியீடு: 7 நவம்பர் 1961
இயக்கம்: எம். எ. திருமுகம்
திரைக்கதை: ஆரூர் தாஸ்
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , பி. கண்ணாம்பா

4. மாடப்புறா [1962]
வெளியீடு: 16 பிப்ரவரி 1962
இயக்கம்: எஸ். ஏ. சுப்ரமண்யம்
திரைக்கதை: திலகன் நாராயணசாமி
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா, எம். என். நம்பியார். கே. வசந்தி

5. தாயைக் காத்த தனயன் [1962]
வெளியீடு: 13 ஏப்ரல் 1962
இயக்கம்: எம். ஏ. திருமுகம்
திரைக்கதை: ஆரூர் தாஸ்
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , பி. கண்ணாம்பா, எஸ். ஏ. அசோகன்

6. குடும்ப தலைவன் [1962]
வெளியீடு: 15 ஆகஸ்ட் 1962
யக்கம்: எம். ஏ. திருமுகம்
திரைக்கதை: ஆரூர் தாஸ்
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , எஸ். ஏ. அசோகன் , வி. கே. ராமசாமி

7. பாசம் [1962]
வெளியீடு: 31 ஆகஸ்ட் 1962
இயக்கம்: டீ. ஆர். ராமண்ணா
கதை: ‘துறையூர்’ கே. மூர்த்தி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , டீ. ஆர். ராஜகுமாரி, கல்யாண் குமார், ஷீலா

8. பணத்தோட்டம் [1963]
வெளியீடு: 11 ஜனவரி 1963
இயக்கம்: கே. ஷங்கர்
எழுதியவர்: பி. எஸ். ராமய்யா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: ஷீலா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன் , நாகேஷ்

9. தர்மம் தலை காக்கும் [1963]
வெளியீடு: 22 பிப்ரவரி 1963
யக்கம்: எம். ஏ. திருமுகம்
திரைக்கதை: சா. அய்யாபிள்ளை
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , எஸ். ஏ. அசோகன் , வி. கே. ராமசாமி

10. பெரிய இடத்து பெண் [1963]
வெளியீடு: 10 மே 1963
இயக்கம்: டீ. ஆர். ராமண்ணா
திரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: எம். ஆர். ராதா , எஸ். ஏ. அசோகன், நாகேஷ்

11. நீதிக்குப்பின் பாசம் [1963]
வெளியீடு: 15 ஆகஸ்ட் 1963
யக்கம்: எம். ஏ. திருமுகம்
எழுதியவர்: ஆரூர் தாஸ்
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், எஸ். வி. ரங்கா ராவ் , எம். ஆர். ராதா

12. என் கடமை [1964]
வெளியீடு: 13 மார்ச் 1964
இயக்கம்: எம். நடேசன்
எழுதியவர்: மா. ரா.
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , எம். ஆர். ராதா

13. பணக்கார குடும்பம் [1964]
வெளியீடு: 24 ஏப்ரல் 1964
இயக்கம்: டீ. ஆர். ராமண்ணா
திரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: நாகேஷ் , மணிமாலை, எஸ். ஏ. அசோகன்

14. தெய்வ தாய் [1964]
வெளியீடு: 18 ஜூலை 1964
இயக்கம்: பி. மாதவன்
திரைக்கதை: ஆர். எம். வீரப்பன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன் , நாகேஷ்

15. படகோட்டி [1964]
வெளியீடு: 23 நவம்பர் 1964
இயக்கம்: டீ. பிரகாஷ் ராவ்
திரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , மனோரமா, ஜெயந்தி

16. தாயின் மடியில் [1964]
வெளியீடு: 18 டிசம்பர் 1964
இயக்கம்: அதுர்த்தி சுப்பா ராவ்
எழுதியவர்: சொர்ணம்
இசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , எம். ஆர். ராதா

17. எங்க வீட்டு பிள்ளை [1965]
வெளியீடு: 14 ஜனவரி 1965
இயக்கம்: டப்பி சாணக்யா
திரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணை நடிகர்கள்: எஸ். வி. ரங்கா ராவ், எம். என். நம்பியார், பண்டரி பாய்

18. கலங்கரை விளக்கம் [1965]
வெளியீடு: 28 ஆகஸ்ட் 1965
இயக்கம்: கே. ஷங்கர்
எழுதியவர்: ஜி. பாலசுப்ரமணியம்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , மனோரமா

19. ஆசை முகம் [1965]
வெளியீடு: 10 டிசம்பர் 1965
இயக்கம்: பி. புள்ளையா
திரைக்கதை: ஆரூர் தாஸ்
இசை: எஸ். எம். சுப்பைச் நாயுடு
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , கே. டி. சந்தானம்

20. அன்பே வா [1966]
வெளியீடு: 14 ஜனவரி 1966
இயக்கம்: ஏ. சி. திருலோகச்சந்தர்
திரைக்கதை: ஏ. சி. திருலோகச்சந்தர்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
இணை நடிகர்கள்: எஸ். ஏ. அசோகன் , நாகேஷ் , மனோரமா

21. நான் ஆணையிட்டால் [1966]
வெளியீடு: 4 பிப்ரவரி 1966
இயக்கம்: தப்பி சாணக்யா
திரைக்கதை: ஆர். எம். வீரப்பன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , கே. ஆர். விஜய

22. நாடோடி [1966]
வெளியீடு: 14 ஏப்ரல் 1966
இயக்கம்: பி. ஆர். பந்துலு
எழுதியவர்: ஆர். கே. ஷண்முகம்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
இணை நடிகர்கள்: பாரதி , எம். என். நம்பியார், நாகேஷ்

23. தாலி பாக்கியம் [1966]
வெளியீடு: 27 ஆகஸ்ட் 1966
இயக்கம்: கே. பி. நாகபூஷணம்
திரைக்கதை: ஆரூர் தாஸ்
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், நாகேஷ் , மனோரமா

24. பறக்கும் பாவை [1966]
வெளியீடு: 11 நவம்பர் 1966
இயக்கம்: டீ. ஆர். ராமண்ணா
திரைக்கதை: சக்தி டீ. கே. கிருஷ்ணசாமி
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
இணை நடிகர்கள்: காஞ்சனா, சந்திரபாபு , கே. ஏ. தங்கவேலு

25. பெற்றால்தான் பிள்ளையை [1966]
வெளியீடு: 9 டிசம்பர் 1966
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு
திரைக்கதை: ஆரூர் தாஸ்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
இணை நடிகர்கள்: எம். என். நம்பியார், எம். ஆர். ராதா , சௌகார் ஜானகி

26. அரச கட்டளை [1967]
வெளியீடு: 19 மே 1967
இயக்கம்: எம். ஜி. சக்ரபாணி
திரைக்கதை: ஆர். எம். வீரப்பன்
இசை: கே. வி. மஹாதேவன்
இணை நடிகர்கள்: ஜெயலலிதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *