தமிழ்ச்சோலைக்கு வருக

தமிழ்ச்சோலைக்கு வருக: உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்ச்சோலை இணையதள குழுவின் வணக்கம்.

இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாள் ஆகும். ஏனென்றால் தமிழியில் ஒரு ப்ளாக் உருவாக்க வேண்டும் என்பது எங்களுடையா நீண்டநாள் கனவு. இன்று அந்த கனவு நனவாகி இருக்கின்றது.

இதற்க்கு முன்பு lyricsraaga.com மற்றும் moviebookmusic.com என்ற இரு ஆங்கில இணையதலங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். என்றாலும் எங்களுடைய தாய் மொழியில் ஒரு பயனுள்ள இணையத்தளம் உருவாக்க வேண்டும் என்பது எங்களுடைய ஏக்கம். இன்று அந்த ஏக்கம் தீர்ந்தது அனால் வேலை தொடங்குகிறது.

இந்த பிளாகில் நாங்கள் பல துறை சார்ந்த பல தகல்வல்களை பரிமாறவிருக்கிறோம். செய்தி, சினிமா, இசை, இலக்கியம், புத்தகம், வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், வியாபாரம், கல்வி, கணினி, அரசியல், விளையாட்டு போன்ற பல துறை தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகும் அதே வேலையில், உங்களையும் எங்களோடு இணையுமாறு வேண்டுகோள் வைக்கிறோம்.

எங்களுடை இந்த முயற்சிக்கு தாங்களும் உதவலாம். எப்படி என்றால்?
தாங்களும் உங்களுடைய படைப்புகளை [கதை, கட்டுரை, கவிதை] இந்த பிளாகில் பதிவிடலாம். தங்களுக்கு தெரிந்த துறைசார்ந்த தகவல்களை, அல்லது ஈடுபாடு உள்ள , அல்லது விருப்பமான விஷயங்களை எழுதி எங்களுடைய [email protected] என்ற இ மெயில் விலாசத்துக்கு அனுப்பவும்.

நீங்கள் அனுப்பும் கதை, கட்டுரை, கவிதை அல்லது தகவல்கள் உங்களுடைய சொந்த படைப்பாகவும், வேறெங்கும் [இணையத்தில்] பிரசுரிக்காத , பிற இணையதளங்களில் இருந்து பிரதி எடுக்காத தனிப்பட்ட மற்றும் அசல் ஆனா படைப்பாக இருக்க வேண்டும். உங்கள் படைப்பு ஆங்கிலத்தில் ஏற்கனவே இணையத்தில் பதிவாகி இருந்தால் அதை நீங்கள் தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பலாம்.

எங்களுடைய இந்த முயற்சி வெற்றிபெற உங்களுடைய வாழ்த்தும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் அவசியம். எங்களுடைய இந்த புதிய பயணத்தில் நீங்களும் எங்களோடு நடக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்ளகிரும்.

நன்றி,
தமிழ்ச்சோலை அணி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *