கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்
கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் [Kanne Navamaniye Karpagame Lyrics] : பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய பிரபல கண்ணன் தாலாட்டு பாடல்.
பாடியவர் : பம்பாய் ஜெயஸ்ரீ
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: கண்ணன்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A
கண்ணே நவமணியே
கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே பொக்கிஷமே
கண்மணியே கண்வளராய்..
ஆராரோ அரீராரோ..
ஆராரோ அரீராரோ
ஆராரோ அரீராரோ..
யாரடித்தா நீ அழுதாய்
அழுதகண்ணில் நீர் ததும்ப
பேருரைத்தால் நான்
பெருவிலங்கு பூட்டிடுவேன்..
யாரடித்தா நீ அழுதாய்
அழுதகண்ணில் நீர் ததும்ப
பேருரைத்தால் நான்
பெருவிலங்கு பூட்டிடுவேன்..
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
ஆராரோ, அரீராரோ!
அத்தை அடித்தாளோ
உனக்கு அமுதூட்டும் கையாலே..
சற்றே மனம்பொறுத்து
சந்திரனே கண் வளராய்
அத்தை அடித்தாளோ
உனக்கு அமுதூட்டும் கையாலே..
சற்றே மனம்பொறுத்து
சந்திரனே கண் வளராய்
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
பாட்டி அடித்தாளோ
உனக்கு பால் வார்க்கும் கையாலே
பாட்டி அடித்தாளோ
உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன்
குஞ்சரமே கண் வளராய்..
கூப்பிட்டு நான் கேட்பேன்
குஞ்சரமே கண் வளராய்..
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
மாமி அடித்தாளோ
உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி மனம் பொறுத்து
சண்முகனே கண் வளராய்
மாமி அடித்தாளோ
உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி மனம் பொறுத்து
சண்முகனே கண் வளராய்
ஆராரோ, அரீராரோ!
ஆராரோ, அரீராரோ!
தமையன் அடித்தானோ
உன்னை தயிரூட்டும் கையாலே
தமையன் அடித்தானோ
உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து
நித்திரை செய் கோமகனே..
நிமிடம் மனம் பொறுத்து
நித்திரை செய் கோமகனே..
ஆராரோ, அரீராரோ!
ஆராரோ, அரீராரோ!
ஆராரோ, அரீராரோ..
அக்காள் அடித்தாளோ
உன்னை அம்மான்மார் வைதாரோ
அக்காள் அடித்தாளோ,
உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன்
வித்தகனே கண் வளராய்..
விக்கவே தேம்புவதேன்
வித்தகனே கண் வளராய்..
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
பெற்றோர் அடித்ததுண்டோ
அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்
பெற்றோர் அடித்ததுண்டோ
அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்
அழாதே அழாதே! எங்கள் அரசே நீ
அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க
துரையே நீ கண் வளராய்
தொழுவார் பலர் இருக்க
தூயவளே நீ கண் வளராய்
அரசே நீ கண் வளராய்
ஆரமுதே கண்வளராய்