அன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்

அன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ் [Andru Keatpavan Arasan Marandhaal Song Lyrics in Tamil]: டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: அன்று கேட்பவன் அரசன் மறந்தால்

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A

அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடல் வரிகள்

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா..

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்

மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
இதயம் குலைந்து தவிக்கிறான்
இறைவா.. இறைவா..

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்

அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்
அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்
தன்னை அடித்தால் பழிக்கிறான்
இறைவா இறைவா..

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்

கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
யாவும் அருள்வான் நம் இறைவன்
இறைவா.. இறைவா..

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா இறைவா இறைவா..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *