ஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள்

ஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள் [Aayarpadi Maaligaiyil Song Lyrics in Tamil] :  பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய கண்ணன் பக்தி பாடல்.  பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் , இசை அமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள்.

Lord Krishna Songsபாடல்: கண்ணே நவமணியே கற்பகமே

இசை: எம். எஸ். விஸ்வநாதன்
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: கண்ணன்

ஆயர்பாடி மாளிகையில்  பாடல் வரிகள் | Aayarpadi Maaligaiyil Song Lyrics in Tamil

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *