அழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள்

அழகென்ற சொல்லுக்கு முருகா | முருகன் பக்தி பாடல்கள் [Azhagendra Sollukku Muruga Song Lyrics in Tamil]: அழகென்ற சொல்லுக்கு முருகா பிரபல – பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.

முருக பெருமான் சுப்ரமண்யா, கார்த்திகேயா, குமார, ஸ்கந்தா மற்றும் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதியின் மகன் மற்றும் விநாயகரின் தம்பி.

டி.எம்.எஸ் என பிரபலமாக அறியப்பட்ட டி.எம். டி.எம். சௌந்தரராஜன் [தோகுலுவ மீனாட்சி ஐயங்கார் சவுந்தரராஜன்] தமிழ்நாடு இதுவரை தயாரித்த மிகச் சிறந்த பாடகர். ஆறரை தசாப்தங்களாக நீடித்த இசை வாழ்க்கையில், டி.எம்.எஸ் 3162 திரைப்படங்களில் 11 வெவ்வேறு மொழிகளில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியுள்ளது. திரைப்படப் பாடல்களைத் தவிர, பக்தி பாடல்களுக்கும் அவர் பெயர் பெற்றவர்.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A

அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | Azhagendra Sollukku Muruga Song Lyrics

முருகா.. முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா..

சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா..
சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா முக்
முக் கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா..

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப் பழமுன்னை யல்லாது பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா..

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா
சக்தியுமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா..

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா
பிரணவப் பொருள் கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரஹரா ஷண்முகா முருகா..
அரஹரா ஷண்முகா முருகா
என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா..

அன்பிற்கு எல்லையோ முருக..
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருக..
அன்பிற்கு எல்லையோ முருக
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருக
கண்கண்ட தெய்வமே முருக
கண்கண்ட தெய்வமே முருக
எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருக

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா.. முருகா.. முருகா..

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *