சிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்

சிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் | சிவன் பக்தி பாடல்கள்: [Chidambaram Serndal Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் இசை அமைத்து, பாடிய ‘சிதம்பரம் சேர்ந்தால்’ பிரபல சிவன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் தமிழ் நம்பி.

டி.எம்.எஸ் என பிரபலமாக அறியப்பட்ட டி.எம். டி.எம். சௌந்தரராஜன் [தோகுலுவ மீனாட்சி ஐயங்கார் சவுந்தரராஜன்] தமிழ்நாடு இதுவரை தயாரித்த மிகச் சிறந்த பாடகர். ஆறரை தசாப்தங்களாக நீடித்த இசை வாழ்க்கையில், டி.எம்.எஸ் 3162 திரைப்படங்களில் 11 வெவ்வேறு மொழிகளில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியுள்ளது. திரைப்படப் பாடல்களைத் தவிர, பக்தி பாடல்களுக்கும் அவர் பெயர் பெற்றவர்.

Sojugada Sooju Mallige Tamil Versionபாடல்: சிதம்பரம் சேர்ந்தால்

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: சிவன்
இசை: டீ. எம். சௌந்தராஜன்
எழுதியவர்: தமிழ் நம்பி

சிதம்பரம் சேர்ந்தால் பாடல் வரிகள் |Chidambaram Serndal Song Lyrics in Tamil

சிதம்பரம் சேர்ந்தால்
இகபரம் இரண்டும்
சீர்பெற வழியுண்டு
தில்லை சிவன் அருள் நிலை உண்டு

சிதம்பரம் சேர்ந்தால்
இகபரம் இரண்டும்
சீர்பெற வழியுண்டு..
தில்லை சிவன் அருள் நிலை உண்டு ..

பதம்பெறு நடன பரம சபாபதி..
பதம்பெறு நடன பரம சபாபதி
தகதிமி தகவென..
தகதிமி தகவென
தாண்டவம் ஆடிய ..
தகதிமி தகவென
தாண்டவம் ஆடிய ..

சிதம்பரம் சேர்ந்தால் இகபரம் இரண்டும்
சீர்பெறவழியுண்டு
தில்லை சிவன் அருள் நிலை உண்டு..

இருபெரும் முனிவர்கள்
விழிகள் குளிர்ந்திட..
இறை நடம் புரிந்த நிலம்..

இருபெரும் முனிவர்கள்
விழிகள் குளிர்ந்திட..
இறை நடம் புரிந்த நிலம்..

இறை அறிவெனும் களத்தினில்
மாணிக்கவாசகர்
இறை அறிவெனும் களத்தினில்
மாணிக்கவாசகர்
செறுபகை தவிர்த்த தலம்

சிதம்பரம் சேர்ந்தால்
இகபரம் இரண்டும்
சீர்பெறவழியுண்டு..
தில்லை
சிவன் அருள் நிலை உண்டு

ஓதிய ஐந்தெழுத்தின்
அருளால் நந்தன்
ஜோதியில் கலந்த இடம்..

ஓதிய ஐந்தெழுத்தின்
அருளால் நந்தன்
ஜோதியில் கலந்த இடம்..

அந்த மாதொரு பாகனின்
தொண்டர் புராண
அந்த மாதொரு பாகனின்
தொண்டர் புராண
மணியரங்கமைந்த இடம்..

சிவ சிதம்பரம் சேர்ந்தால்
இகபரம் இரண்டும் சீர்பெறவழியுண்டு
தில்லை சிவன் அருள் நிலை உண்டு..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *