கந்தன் திருநீறு அணிந்தால் | முருகன் பக்தி பாடல்கள்

கந்தன் திருநீறு அணிந்தால் | முருகன் பக்தி பாடல்கள் [Kandhan Thiruneer Anindhaal Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் எம். பி. சிவம், இசை டீ. எம். சௌந்தராஜன் அவர்கள்.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: கந்தன் திருநீறு அணிந்தால்

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
மொழி : தமிழ்
எழுதியவர்: எம். பி. சிவம்

கந்தன் திருநீறு அணிந்தால் பாடல் வரிகள் | Kandhan Thiruneer Anindhaal Lyrics in Tamil

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள்.

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்

மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா

தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா
தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா.

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *