வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள்

வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள் [Vel Vanthu Vinai Theerka Song Lyrics in Tamil]: வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து – பிரபல பாடகிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.

பாடலை எழுதியவர் கவிஞர் திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம், இசை அமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.  சுலமங்கலம் சகோதரிகள் பக்தி பாடல்கள் அவர்களின் முருக பெருமான் மற்றும் அம்மான் பாடல்களுக்கு மிகவும் பிரபலமானவை.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து

பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
இசை: வைத்தியநாதன்
எழுதியவர்: உளுந்தூர்பேட்டை சண்முக

அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | Vel Vanthu Vinai Theerka Song Lyrics

வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி..

வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி..

பால்கொண்டு நீராட்டி
பழம் தந்து பாராட்டி

பால்கொண்டு நீராட்டி
பழம் தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
பூமாலை போட்டேனடி..
திருப்புகழ்மாலை கேட்டேனடி..
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி

வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி..

பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில்
பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில்
கந்தன் எனைக் கண்டானடி..
கந்தன் எனைக் கண்டானடி..
எந்தன் சிந்தையில் நின்றானடி
கந்தன் எனைக் கண்டானடி..
எந்தன் சிந்தையில் நின்றானடி

வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி..
அந்தக் காட்சியென்றும் இனிக்குமடி
காலமெல்லாம் இருக்குமடி..
அந்தக் காட்சியென்றும் இனிக்குமடி..

வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *