எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள் [Enthan Kuralil Inippathellaam Song Lyrics in Tamil]: டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் 

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் பாடல் வரிகள் | Enthan Kuralil Inippathellaam Song Lyrics in Tamil

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே
அதில் … நான் என்றும் மாறாத தனி இனமே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே
கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே
அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *