ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் | நவராத்திரி பாடல்கள்

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் | நவராத்திரி பாடல்கள் [Jaya Jaya Devi Durga Devi lyrics Song Lyrics in Tamil]:ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் – பிரபல பின்னணி பாடகி  பி. சுஷீலா அவர்கள் பாடிய பிரபல அம்மன் பக்தி பாடல்.

amman devotional tamil songsபாடல்: ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

பாடியவர் : பி. சுஷீலா
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: அம்மன்
இசை: N/A
எழுதியவர்: N/A

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் | Jaya Jaya Devi Durga Devi lyrics in Tamil

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்

துர்க்கையம்மனை துதித்தால்
என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை
தரிசனம் கண்டால் போதும்

துர்க்கையம்மனை துதித்தால்
என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வமங்களம் கூடும்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்

பொற்கரங்கள் பதினெட்டும்
நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டும்
வெற்றிப் பாதையைக் காட்டும்

ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய் போல் நம்மை காப்பவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா
தங்க கைகளில் தாங்கி நிற்பாள்
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *