மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் | முருகன் பாடல்கள்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் | முருகன் பாடல்கள்  [Mannanalum Thiruchenduril Mannaven Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: மண்ணானாலும் திருச்செந்தூரில்

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A

மண்ணானாலும் திருச்செந்தூரில் பாடல் வரிகள் | Mannanalum Thiruchenduril Mannaven Lyrics 

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன் நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன் நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பேறம் உண்டாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பேறம் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன் நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன் நான்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

முருகா.. முருகா.. முருகா.. முருகா..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *