பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள் [Pallikattu Sabari Malaikku Song Lyrics in Tamil] : இந்த பிரபல சுவாமி ஐயப்பன் பக்தி பாடலை பாடியவர் பாடகர் வீரமணி ராஜு அவர்கள். பாடலை எழுதியவர் வீரமணி சோமு, இசை அமைத்தவர் வீரமணி கிருஷ்ணா அவர்கள்.

Tamil Ayyappan Songs lyricsபாடல்: பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

பாடியவர் : வீரமணி ராஜு
வகை: பக்தி பாடல்
தெய்வம்: சுவாமி ஐயப்பன்
இசை: வீரமணி கிருஷ்ணா
எழுதியவர்: வீரமணி சோமு

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | Pallikattu Sabari Malaikku Song Lyrics in Tamil

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர‌ தீபம் சுவாமிக்கே
ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு
அய்யனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார்
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை
பார்க்க‌ வேண்டியே தவமிருந்து

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருந‌தி பம்பையை கண்டிடுவார்
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

கங்கை நதி போல் புண்ணிய‌ நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக‌ பலம் தா பாத‌ பலம் தா
தேக‌ பலம் தா பாத‌ பலம் தா

தேக‌ பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத‌ பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார் நல்ல‌
பாதையை காட்டிடுவார்
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சபரி பீடமே வந்திருவார்
சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலைதனை நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
அய்யனை துதிக்கயிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா | 6 |

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *