பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | சீர்காழி கோவிந்தராஜன்

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | சீர்காழி கோவிந்தராஜன் [Pillaiyar Suzhi Poattu Seyal Edhuvum Thodangu Song Lyrics in Tamil]: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல விநாயகர் பக்தி பாடல்.

lord-vinayagar-tamil-devotional-songsபாடல்: பிள்ளையார் சுழி போட்டு செயல்

பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: விநாயகர்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A

பிள்ளையார் சுழி போட்டு செயல் பாடல் வரிகள் 

ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும் வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்

சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *