தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல் [Thaaye Karumaari Engal Thaaye Karumaari Song Lyrics in Tamil]: தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி – பிரபல பின்னணி பாடகி  எல் . ஆர். ஈஸ்வரி அவர்கள் பாடிய பிரபல அம்மன் பக்தி பாடல்.

amman devotional tamil songsபாடல்: தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி

பாடியவர் : எல். ஆர். ஈஸ்வரி
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: அம்மன்
இசை: கலைவாணன்
எழுதியவர்: கலைவாணன்

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி பாடல் வரிகள் | Thaaye Karumaari Engal Thaaye Karumaari Lyrics

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி..

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி.. துணை நீயே மகமாயி

ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி..

அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி..

சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா
சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி..
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி.. துணை நீயே மகமாயி..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *