தாய் மண்ணே வணக்கம் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து

தாய் மண்ணே வணக்கம் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து [Thai Manne Vanakkam Lyrics In Tamil] 

Thai Manne Vanakkam Lyrics in Tamil - A. R. Rahman - Vande Mataram

பாடல்: தாய் மண்ணே வணக்கம்

இசை: ஏ. ஆர். ரகுமான்
பாடியவர் : ஏ. ஆர். ரகுமான்
எழுதியவர்: வைரமுத்து

 

தாய் மண்ணே வணக்கம் பாடல் வரிகள் 

வந்தே மாதரம் |8|

அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல் திசை எங்கும் பறந்தேன்

வெயிலிலும் மழையிலும் விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்

மனம் பித்தாய் போனதே
உன்னை கண்கள் தேடுதே
தொட கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்

தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் |8|

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்

அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க நதி கொடுத்தாய்

உந்தன் மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களை பரிசளித்தாய்

பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியால் பொங்குதே

வந்தே மாதரம் |8|

தாயே உன் பெயர் சொல்லும் போதே
இதயத்தில் மின் அலை பாயுமே
இனி வரும் காலம் இளைஞனின் காலம்
உன் கடல் மெல்லிசை பாடுமே

தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை
அவள் காலடி பொல் சொர்கம் வேறு இல்லை
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் |18|

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *