கந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக